குளம் உள்ள பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த க. புத்தூர் குளத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர். இக்குளத்தில் உள்ள தண்ணீரை மக்கள் குளிக்கவும், துணி துவைப்பதற்கும் பயன்படுத்தினர். மேலும், ஆடு, மாடுகள் குடிநீர் பருகி வந்தன. கடந்த 5 ஆண்டுகளாக குளம் தூர்வாராததால் குளத்திற்குள் முட்புதர்கள் மண்டியுள்ளன. பாசிகள் அதிகளவில் சேர்ந்துள்ளது.

குளத்தைச் சுற்றி குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், குளத்தை சுற்றி ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், குளம் இருந்த இடமே தெரியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தூர்ந்துள்ள குளத்தை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: