துபாயில் இருந்து டெல்லிக்கு விமானத்தின் கடத்திவரப்பட்ட விலை உயர்ந்த வாட்ச்கள் பறிமுதல்: ஒருவர் கைது

டெல்லி: துபாயில் இருந்து டெல்லிக்கு விமானத்தின் மூலமாக விலை உயர்ந்த பொருட்களை கடத்தப்பட்டு வருவதாக டெல்லி விமான நிலைய சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து துபாயில் இருந்து இன்று டெல்லி வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு பயணியின் பையை சோதனை செய்ததில் அதில் ரோலக்ஸ், ஜேக்கப் அண்ட் கோ, பைகெட் லிம்லைட் ஸ்டெல்லா போன்ற விலை உயர்ந்த 7 வாட்ச்கள் கைப்பற்றப்பட்டன. அதில், ஜேக்கப் அண்ட் கோ என்ற வாட்ச் தங்கம் மற்றும் வைரக்கல் பதிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. அந்த ஒற்றை வாட்சின் மதிப்பு ரூ.27.9 கோடியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாட்ச்களுடன் சேர்த்து தங்கம், வைரம் பதிக்கப்பட்ட கைசெயின், ஐபோன் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் பரிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு பல கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து துபாயில் இருந்து விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வந்த பயணி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் மற்றும் அவரது உறவினரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பல கிளைகள் அமைத்து வாட்ச் கடை நடத்தி வருவது தெரியவந்தது.  

பின்னர் கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், கைப்பற்றப்பட்ட 7 வாட்ச்களையும் குஜராத்தை சேர்ந்த பிரபலமான நபருக்கு விற்பனை செய்ய கொண்டு வந்ததாகவும், டெல்லியில் உள்ள 5 நட்சத்திர விடுதியில் வைத்து வாட்ச்களை அந்த நபரிடம் கொடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த பிரபலமான நபர் யார் மற்றும் அவரது பெயர் என்ன? என கைதான நபர் இதுவரை கூறவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: