குஜராத்தின் மணிநகர் அருகே தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த மாடுகள் மீது மோதியதில், வந்தே பாரத் ரயில் சேதம்

காந்திநகர்: பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த மாடுகள் மீது மோதியதில் சேதமடைந்துள்ளது.

மும்பையில் இருந்து குஜராத் காந்திநகர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன்படி, இன்று காலை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. அந்த ரயில், வத்வா ரயில் நிலையத்தில் இருந்து மணிநகர் ரயில் நிலையம் இடையே சென்று கொண்டிருந்தபோது, காட்டெருமை கூட்டம் ஒன்று அந்த வழியே சென்றுள்ளது.

விரைவாக சென்று கொண்டிருந்த ரயில் அந்த மாடுகளின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் 4 காட்டெருமைகள் வரை சிக்கியுள்ளன. எனினும், என்ஜினின் செயல் பகுதி பாதிக்கப்படவில்லை. இதனால், சில நிமிடங்களில் காட்டெருமைகளின் உடல்கள் நீக்கப்பட்டு, ரயில் புறப்பட்டு சரியான நேரத்தில் காந்திநகரை சென்றடைந்து உள்ளது.

காந்திநகர் மற்றும் மும்பை சென்ரல் இடையேயான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

Related Stories: