×

கட்டணமில்லா பேருந்தில் 176.84 கோடி முறை பெண்கள் பயணம்: தமிழக அரசு தகவல்

சென்னை : தமிழ்நாட்டில் கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் கீழ் இதுவரை 176 கோடி 84 லட்சம் முறை பெண்கள் பயணம் செய்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கும் திட்டத்தை அரசு கடந்த ஆண்டு மே மாதம் அமல் படுத்தியது. இதையடுத்து இந்த திட்டம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில், சாதாரண பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தின் கீழ் அக்டோபர் 5-ம் தேதி வரை 176 கோடியே 84 லட்சம் முறை பெண்கள் பயணம் செய்திருப்பதாக அரசு தெரிவித்திருக்கிறது. இதில், 10.01 லட்சம் முறை திருநங்கைகளும், 129.10 முறை மாற்று திறனாளிகள் பயணம் செய்திருப்பதாகவும் நாள் ஒன்றுக்கு பயணம் செய்யும் மகளிர் எண்ணிக்கை 39.21 லட்சமாக இருப்பதாக தமிழக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


Tags : Tamil Nadu , Toll Free, Bus, Women, Travel, Tamil Nadu, Government, Information
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...