துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதி, 8 மாத குழந்தை, உறவினர் உடல்கள் பழத்தோட்டத்தில் மீட்பு: அமெரிக்காவில் பரபரப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் ஜஸ்தீப் சிங் (36). இவரது பூர்வீகம் பஞ்சாபின் ஹோஷியார்பூரில் உள்ள ஹர்சி பிண்டி பகுதியாகும். கலிபோர்னியாவில் தனது, மனைவி ஜஸ்லீன் கவுர் (27), 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி மற்றும் உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோருடன் வசித்து வருகிறார். கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோர உணவகம் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல், 4 பேரையும் கடத்தியது. அவர்கள் யார், எதற்காக கடத்தினார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கடத்திய நபர் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், அவர்களை கண்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் இதுபற்றி எந்த ஒரு தகவலையும் போலீசார் தெரிவிக்கவில்லை. கடத்திய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் மெர்சிட் கவுண்டி என்ற பகுதியில் உள்ள ஒரு பழத்தோட்டத்தில் ஒரு குழந்தை மற்றும் 3 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். அவர்கள், கடத்தப்பட்ட ஜஸ்தீப் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர் என தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: