×

தாய்லாந்தில் முன்னாள் காவல் அதிகாரி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி: 12 பேர் காயம்

பாங்காக்: தாய்லாந்து நாட்டின் நோங் பூவா  லாம்பூ மாகாணத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 22 சிறுவர்கள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர் 34 வயதான முன்னாள் போலீஸ் அதிகாரி என்றும், துப்பாக்கிச் சூடு நடத்தியதை தொடர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதில் மேலும் 12 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்திய நபர் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய காரணங்களுக்காக காவல்துறையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மதிய உணவு நேரத்தில் துப்பாக்கி சூடு நடத்திய போது சுமார் 30 குழந்தைகள் மையத்தில் இருந்ததாக  அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் எட்டு மாத கர்ப்பிணியான ஒரு ஆசிரியர் உட்பட நான்கு அல்லது ஐந்து ஊழியர்களை அவர் முதலில் சுட்டுக் கொன்றதாக மாவட்ட அதிகாரி கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது துப்பாக்கி வைத்திருப்பவர்களின் விகிதம் அதிகமாக இருந்தாலும், சட்டவிரோத ஆயுதங்கள் பொதுவானவை என்றாலும், தாய்லாந்தில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் அதிக நபர்களை கொள்வது மிக அரிதானதாக பார்க்கபடுகிறது. முன்னதாக 2020 -ம் ஆண்டில், சொத்து பேரத்தின் மீது கோபமடைந்த ஒரு பாதுகாப்பு  படை வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் குறைந்தது 29 பேரைக் கொலை செய்யப்பட்டனர். மேலும் 57 பேர் காயமடைந்தனர்.

Tags : Thailand , Thailand, ex-police officer, shooting, 34 people including children killed
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...