ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே பரபரப்பு, குப்பையாக கொட்டி கிடந்த குட்கா பொருட்கள்; மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம்  ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள ஜங்ஷன் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று வெளிமாநில குட்கா பொருட்கள் குப்பையாக கொட்டப்பட்டு கிடந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவ்வழியாக சென்ற போது வித்தியாசமான பொருட்கள் பாக்கெட்டுகளாக காணப்பட்டதால் ரயில் பயணிகளும் பொதுமக்களும் வேடிக்கை பார்த்தனர். அப்போது தமிழகத்தில் தடை செய்யப்பட்ட  ரூ.10 ஆயிரம் மதிப்பிலான வெளிமாநில குட்கா பொருட்கள் குப்பையாக கொட்டி கிடந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வீசி சென்றவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தற்போது குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் தீவிர  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் போலீசாரின் சோதனைக்கு பயந்து மர்ம நபர்கள் குப்பையாக கொட்டி விட்டு சென்று இருக்கலாம் என தெரிகிறது. மேலும் வெளிமாநில குட்கா பொருட்களை திறந்தவெளியில் சாலையோரத்தில் மர்ம நபர்கள் குப்பையாக கொட்டி விட்டு சென்றதால் வழியாக செல்லும் ரயில் பயணிகளும் பொதுமக்களும் வேடிக்கை பார்த்து நின்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  மேலும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து சோதனைக்கு பயந்து சாலை ஓரத்தில் கொட்டி விட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: