3 நாள் தொடர் விடுமுறை: திருச்சி கடைவீதிகள், முக்கொம்பில் குவிந்த மக்கள் கூட்டம்

திருச்சி: தீபாவளி பர்ச்சேசுக்காக குவிந்த மக்களால் திருச்சி என்எஸ்பி ரோடு, பெரியக்கடை வீதி என முக்கிய சாலைகள் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. கடைவீதிகளில் தீபாவளி விற்பனை களை கட்டியது. பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்ட மாணவ, மாணவிகள் வீட்டிலும், சொந்த ஊர்களிலும் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஆயுதபூஜைக்காக தொடர்ந்து 2 நாள் அரசு விடுமுறை வந்ததை அடுத்து அரசு, தனியார் நிறுவன அலுவலர்கள், பணியாளர்களும் வீட்டில் விடுமுறையில் இருந்த தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் தீபாவளி பர்ச்சேசுக்காக நேற்று திருச்சி மாநகரில் உள்ள ஜவுளி, நகைக் கடைகளுக்கு படையெடுத்தனர். இதனால் திருச்சியின் முக்கிய வீதிகளான மெயின்கார்டு கேட், என்எஸ்பி ரோடு, பெரியகடைவீதி, தில்லைநகர், சாஸ்திரி சாலை என முக்கிய வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அக்டோபர் 24ம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்பட உள்ளது. பெரும்பாலான குடும்பத்தார் நவராத்திரி முடிந்து விஜயதசமி நாளில் தீபாவளி பண்டிகைக்கான ஆடைகளை வாங்குவது வழக்கம். நேற்று விஜயதசமி விடுமுறை தினம் என்பதால், பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் பர்ச்சேசுக்காக கிளம்பினர். இன்னும் சிலர் திருச்சியின் முக்கிய சுற்றுலாத்தலங்களான முக்கொம்பு, கல்லணை, வண்ணத்துப்பூச்சி பூங்கா போன்ற இடங்களுக்கு சென்று விடுமுறையை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அங்கு தடுப்பணை அருகே குளித்து மகிழ்ந்தனர். மேலும் அங்கு பூங்காவில் ஊஞ்சல், ராட்டினம், மற்றும் படகு விளையாட்டு என குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.

குடும்பம், குடும்பமாக குழந்தைளுடன் முக்கொம்புக்கு குழந்தைகளை அழைத்து கொண்டு வந்திருந்தனர். முக்கொம்புக்கு நேற்று பல்வேறு இடங்களில் இருந்து சுமார் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து வந்ததால் பரபரப்பாக காணப்பட்டது. அதேபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சமயபுரம் மாரியம்மன், மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோவில், குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி உள்ளிட்ட கோவில்களிலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. மக்கள் கூட்டத்தால் கோவில்கள், சுற்றுலாத்தலங்கள், தியேட்டர்கள், ஓட்டல்கள் என அனைத்தும் நேற்று ஹவுஸ்புல்லாகவே காட்சியளித்தன. பெரும்பாலான மக்கள் விடுமுறையையொட்டி வெளியே வந்ததால், ஓட்டல்களிலும் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

ஆயுதபூஜை விடுமுறைக்கு ஓட்டல்களில் பணியாற்றிய ஊழியர்கள் பலரும் ஊருக்கு சென்றுவிட்டதால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறினர். இருக்கும் ஊழியர்களை வைத்துக்கொண்டு ஓட்டல் உரிமையாளர்கள் கூட்டத்தை சமாளித்தனர். மேலும் தியேட்டர்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. விடுமுறை தினத்தை பயனுள்ளதாக கழித்து, தீபாவளி பர்ச்சேசையும் முடிந்த சந்தோஷத்தில் மக்கள் இல்லங்களுக்கு திரும்பினர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சமயபுரம் மாரியம்மன், மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோவில், குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி உள்ளிட்ட கோவில்களிலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. மக்கள் கூட்டத்தால் கோவில்கள், சுற்றுலாத்தலங்கள், தியேட்டர்கள், ஓட்டல்கள் என அனைத்தும் நேற்று ஹவுஸ்புல்லாகவே காட்சியளித்தன.

Related Stories: