சென்னையில் விற்பதற்காக ஆடு திருடிய 2 பேர் கைது

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் ஆடு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து வந்தது. இதனால் ஆடு திருட்டு கும்பலை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்து.  இந்நிலையில் வேதாரண்யம் பகுதியில் நேற்றிரவு தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு சொகுசு கார் மின்னல் வேகத்தில் சென்றது. இதையடுத்து அந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது காரில் வாய் கட்டப்பட்ட நிலையில் 9 ஆடுகள் இருந்தது. இதையடுத்து காரில் சென்ற சென்னையை சேர்ந்த 2 பேர் மற்றும் காருடன் 9 ஆடுகளை வேதாரண்யம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதைதொடர்ந்து 2 பேரிடம் நடத்திய விசாரணையில், சென்னை திருவான்மியூரை சேர்ந்த காசிம்(33), மோத்திபாபு(43) என்பதும், வேதாரண்யம் பகுதியில் ஆடுகளை திருடி சென்னையில் விற்பனை செய்ய கொண்டு செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காரில் இருந்து தப்பியோடிய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: