லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட்: இந்தியா கேப்பிடல்ஸ் அணி சாம்பியன்

ஜெய்பூர்: ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்ற லெஜன்ட்ஸ் லீக் டி.20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வந்தது. 4 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதி போட்டி நேற்று இரவு ஜெய்பூரில் நடந்தது. இதில் கவுதம் கம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிடல்ஸ், இர்பான் பதான் தலையிலான பில்வாரா கிங்ஸ் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய கேப்பிடல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 211 ரன் குவித்தது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 41 பந்தில், 82 ரன், மிட்செல் ஜான்சன் 35 பந்தில் 62, ஆஷ்லே நர்ஸ் 19 பந்தில் 42 ரன் அடித்தனர். பில்வாரா கிங்ஸ் பவுலிங்கில், ராகுல் சர்மா 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 212 ரன் இலக்கை துரத்திய பில்வாரா கிங்ஸ் 18.2 ஓவரில் 107 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக வாட்சன் 27, ஜேசல் காரியா 22 ரன் அடித்தனர். இந்தியா கேப்பிடல்ஸ் பவுலிங்கில் பவான் சுயல், பிரவீன் தாம்பே, பங்கஜ் சிங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 104 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா கேப்பிடல்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. ராஸ் டெய்லர்ஆட்டநாயகன் விருதும், யூசுப்பதான் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

Related Stories: