திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திவருகிறார். அக். 9ல் கூடவுள்ள பொதுக்குழு தொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. பொதுக்குழு தீர்மானம், துணைப் பொதுச்செயலாளர் நியமனம் குறித்தும் ஆலோசனையில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, கே.என். நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: