மெக்சிகோவில் மர்ம நபர் கண்மூடித்தனமாக நடந்த துப்பாக்கிச்சூட்டில் மேயர் உள்பட 18 பேர் உயிரிழப்பு..!

மெக்சிகோ: மெக்சிகோவில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மேயர் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேயர் கான்ராடோ மென்டோசா அல்மேடா, போலீஸ் அதிகாரிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். தெற்கு மெக்சிகோ குவானா மாகாணத்தில் உள்ள சான் மிகுவெல் டோடோலாபன் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில், போலீசார் மற்றும் பொதுமக்கள் நோக்கி ஆயுதம் ஏந்திய கும்பலை சேர்ந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அதில், தோட்டாக்கள் வெடித்து சிதறும் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் டோடோலாபன் நகர மேயர் உள்பட 18 பேர் கொல்லப்பட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களில் மெக்சிகோவில் நடத்தப்பட்ட 3-வது தாக்குதலாக இந்த துப்பாக்கிச்சூடு பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதல் கோலைத் தனமானது என்றும் குவானா மாகாணம் ஆளுநர் கூறியுள்ளார்.  

Related Stories: