பழநியில் நெருங்குது சீசன்: பக்தர்கள் குளிக்கும் குளங்களில் கமாண்டோ கண்காணிப்பு தேவை

பழநி: பழநியில் சீசன் துவங்கி உள்ளதால் குளங்களில் குளிக்கும் பக்தர்களை பாதுகாக்க காமாண்டோ படை வீரர்களை பயன்படுத்த வேண்டுமென கோரிக் கை விடுக்கப்பட்டுள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கார்த்திகை மாதம் துவங்கி வைகாசி மாதம் வரை ஐயப்ப பக்தர்கள், தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள், பங்குனி உத்திரம், கோடை விடுமுறை என பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு வரும் பக்தர்கள் பழநி பகுதியில் உள்ள சண்முகநதி மற்றும் இடும்பன் குளத்தில் குளிப்பது வழக்கம். தொடர் மழையின் காரணமாக இடும்பன் குளம் மற்றும் சண்முக நதியில் நீர் நிரம்பி உள்ளது.

குளிக்கும் பக்தர்கள் ஆழமான பகுதிகளுக்கு சென்று விடுவதால் வருடம் தோறும் உயிரிழப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. எனவே, தைப்பூச திருவிழா நேரங்களில் மட்டும் நியமிக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடும்பன் குளம் மற்றும் சண்முகநதி பகுதிகளில் குளிக்கும் பக்தர்களை பாதுகாக்க தீயணைப்பு துறையில் நீச்சலடிப்பதில் நல்ல அனுபவமும், திறமையும் வாய்ந்த கமாண்டோ படையினர் ஈடுபடுத்தப்பட வேண்டுமென்றும், பக்தர்கள் ஆழமான பகுதிகளுக்கு சென்று விடுவதை தடுக்கும் வகையில் தடுப்பு பலகையும், வலையும் பயன்படுத்தப்பட வேண்டுமென்றும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: