பொன்னமராவதியில் இருந்து துவரங்குறிச்சிக்கு 9 மணிக்கு மேல் பேருந்து இல்லாததால் மக்கள் அவதி

பொன்னமராவதி: பொன்னமராவதி பேரூந்து நிலையத்தில் இருந்து இரவு நேரத்தில் துவரங்குறிச்சிக்கு கூடுதல் பேரூந்து இல்லாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். பொன்னமராவதி சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஊர்களுக்கு வரும் பொதுமக்கள், அங்கிருந்து துவரங்குறிச்சிக்கு செல்ல இரவு 9 மணிக்கு மேல் பேருந்து இல்லாமல் பரிதவித்து உள்ளனர். இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு செவிசாய்க்க வில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி பொன்னமராவதியிலிருந்து வலையபட்டி, கேசராபட்டி, உலகம்பட்டி வழியாக துவரங்குறிச்சிக்கு இரவு 9மணிக்கு மேல் ஒரு பேரூந்து இயக்கவேண்டும்.

அவ்வாறு இயக்கினால் இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்து வசதி பெருவார்கள் என இந்த வழித்தடத்தில் ஒரு பேரூந்து இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: