திட்டங்களுக்கு படிப்படியாக நிதி குறைப்பு: எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ஒன்ஸைடு கேம் விளையாடுவது போல தெரிகிறது..தமிழக நிதியமைச்சர் பேட்டி..!!

மதுரை: திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் பங்கு குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றசாட்டியுள்ளார். தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஒன்றாக அறிவித்த இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஒன்றை திறந்து வைத்துள்ளனர்; மதுரையில் செங்கல் மட்டுமே உள்ளது. நிதி விகிதம் குறைக்கப்பட்ட நிலையிலும் பிரதமர் பெயரிலேயே திட்டத்தை ஒன்றிய அரசு தொடர்ந்து நடத்துவதாக புகார் தெரிவித்தார். 60 சதவீதம் பங்குடன் தொடங்கப்படும் ஒன்றிய அரசின் பல திட்டங்களுக்கு படிப்படியாக நிதி குறைக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் பெயரில் திட்டத்தை தொடங்கி வைத்து படிப்படியாக குறைக்கப்படுகிறது என்றார். ஜி.எஸ்.டி. பிரச்னை குறித்து முறையிட ஒவ்வொரு மாநிலத்திலும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தேவை. 3 மாதத்துக்கு ஒருமுறை நடத்த வேண்டிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தை முறையாக நடத்த வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அமைச்சர், மதுரை எய்ம்சிக்கு சுவர் கூட கட்டவில்லை; பிலாஸ்பூர் எயம்ஸுக்கு 95 சதவீதம் நிறைவுபெற்றுவிட்டது. எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ஒன்ஸைடு கேம் விளையாடுவது போல தெரிகிறது என்று குற்றம்சாட்டினார்.

Related Stories: