காஷ்மீரில் டிஜிபி படுகொலை வீட்டு வேலைக்காரர் கைது

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் உள்ள உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தவர் ஹேமந்த் குமார் லோகியா (57). சிறைத்துறை டிஜிபி.இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு  லோகியா அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்நிலையில், டிஜிபி கொலை தொடர்பாக அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த யாசிர் லோகர்(23) என்பவரை போலீசார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். இது குறித்து கூடுதல் டிஜிபி முகேஷ் சிங் கூறுகையில், ‘இந்த கொலையில் யாசிர் லோகர் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படுகிறார். அவரிடம் இருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை நடந்த விசாரணையில் தீவிரவாத சதி செயல் எதுவும் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. கொலை குற்றவாளியின் டயரி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் அவர் மனநிலை பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

Related Stories: