தண்டராம்பட்டு அருகே கோயில்களில் திருடிய 7 ஐம்பொன் சிலைகள் பறிமுதல்; 2 பேர் கைது

தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் போலீசார் நேற்று மாலை காம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில், பல்வேறு சுவாமிகளின் 7 ஐம்பொன் சிலைகள் இருந்தது. இதுகுறித்து, பைக்கில் வந்த வாலிபரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர் வாணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட நூக்காம்பாடி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சதீஷ்(38) என்பது தெரியவந்தது.  இவரும், மெய்யூர் ஊராட்சி திருமூர்த்தி நகரை சேர்ந்த மற்றொரு கட்டிட மேஸ்திரி மணிகண்டனும்(39) சேர்ந்து, பல்வேறு கோயில்களில் இருந்து ஐம்பொன் சிலைகளை திருடியதும், அவற்றை நூக்காம்பாடியில் உள்ள வீட்டில் மறைத்து வைக்க கொண்டு சென்றபோது சதீஷ் போலீசில் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து வாணாபுரம் போலீசார், சதீஷ், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Related Stories: