சேத்துப்பட்டில் அடமானம் வைத்த செல்போனை் தர ரசீது கேட்ட அடகு கடைக்காரர் கொலை

சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை சேர்ந்தவர் ராஜகோபால்(70). இவர் சேத்துப்பட்டு- போளூர் சாலையில் அடகு கடை நடத்தி வந்தார். இவரது கடையில் சேத்துப்பட்டு அருகே பழம்பேட்டையை சேர்ந்த சியாமு என்ற மூர்த்தி(18) தனது செல்போனை அடகு வைத்து பணம் வாங்கினாராம். கடந்த மாதம் 18ம் தேதி அடகு கடைக்கு சென்ற மூர்த்தி, பணத்தை திரும்ப கொடுத்துவிட்டு, செல்போனை கேட்டுள்ளார். அதற்கு ராஜகோபால், ரசீது கொண்டு வா, பிறகு செல்போனை தருகிறேன் என கூறியுள்ளார். அப்போது மூர்த்தி, ரசீது தொலைந்து விட்டது, பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு செல்போனை கொடுங்கள் என கூறினாராம். ஆனால் அடகுக்கடைக்காரர் ராஜகோபால், செல்போனை தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி, ராஜகோபாலை கைகளால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்தவர் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து மூர்த்தியை கைது செய்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜகோபால் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் வழக்கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.

Related Stories: