வேலூர் சிறையில் 29வது நாளாக முருகன் உண்ணாவிரதம்

வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ள முருகன், பரோல் வழங்க வலியுறுத்தி பலமுறை சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தார். அவர் மீது செல்போன் பறிமுதல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி முருகன் கடந்த மாதம் 8ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று 29வது நாளாக அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இதனிடையே நேற்று முன்தினம் மாலை சிறைமருத்துவமனையில் அவருக்கு 4 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

Related Stories: