நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர்களுக்கு ரூ.1500 ஊக்கத்தொகை

சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை துணை செயலாளர் ரமேஷ், அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 2012ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வரும் 300 பருவகால பட்டியல் எழுத்தர், உதவுபவர்கள் மற்றும் 286 பருவகால காவலர்களை நிரந்தர காலிப்பணியிடங்களான பட்டியல் எழுத்தர் மற்றும் காவலர், எடையாளர் நிலையில் பணி நியமனம் செய்ய பணி நியமன ஆணைகள் வழங்குதல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 50ம் ஆண்டு பொன்விழாவை சிறப்பிக்கும் விதமாக கழக பணியாளர்களுக்கு தலா ரூ.1500 ஊக்கத் தொகை வழங்குதல் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 12ம் தேதி வழங்குகிறார்.

Related Stories: