100 யூனிட் மின்சார மானியத்தை விட்டால் சலுகை: திட்டத்தை பிரபலப்படுத்த அதிகாரிகள் தீவிரம்

சென்னை: 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரத்தை தானாக முன்வந்து விட்டுக் கொடுப்பதை பிரபலப்படுத்தும் முயற்சியில் மின்வாரியம் தீவிரம் காட்டி வருகிறது என அதன் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழக அரசு கடந்த செப்டம்பர் 10ம் தேதி முதல் அனைத்துத் துறைகளுக்கும் மின் கட்டணத்தை உயர்த்தியது. வீட்டு மின்விநியோக பிரிவில் நுகர்வோருக்கான யூனிட் அடிப்படை விலை ரூ.2.50ல் இருந்து ரூ.4.50 ஆக உயர்த்தப்பட்டது. 400 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் 500 யூனிட் வரையில் யூனிட் ஒன்றுக்கு ரூ.6 ஆக அதிகரித்தது. இவ்வாறு ஒவ்வொரு 100 யூனிட் முதல் 1000 யூனிட் வரையில் மின்சாரத்தின் விலை உயர்த்தப்பட்டது. இருப்பினும் வீட்டு மின்நுகர்வோர்களை பொறுத்தவரை முதல் 100 யூனிட்களுக்கான மின்சாரம் இலவசம் ஆகும். அவர்களின் நுகர்வு முறையைப் பொருட்படுத்தாமல் மற்றும் இரண்டாவது 100 க்கு 50% (ரூ.225) மானியமாக வழங்கப்பட்டது.

இதில் 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தப்படும் பட்சத்தில் 50% மானியம் கிடைக்காது. இந்நிலையில் மானியத்தை தானாக முன்வந்து ஒப்படைக்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் மானியத்தை கைவிடுவதால், ஒருவர் 500 யூனிட் வரை பயன்படுத்தினால் மின் கட்டணமாக ரூ.675 செலுத்த வேண்டும். இந்நிலையில் தற்போது இரண்டாவது 100 யூனிட்டுகளுக்கு 50% மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ரூ.675க்கு பதிலாக கூடுதலாக ரூ.450 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.675யை ஒப்பிடும் போது ரூ.450 குறைவாகும். 500 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 2.17 கோடியாக இருக்கிறது.

இதுகுறித்து மின்வாரிய உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதும் முதலில் ஆரம்பத்தில் கேள்விகள் இருந்தது. இருப்பினும் பலர் இந்தத் திட்டத்தை தேர்ந்தெடுக்கவில்லை. எனவே தான் 50% மானியம் வழங்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளோம். இது இத்திட்டத்தை பயன்படுத்துவோருக்கு குறைந்தபட்ச ஆறுதலாக இருக்கும். மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சார வாரியம் இன்னும் மனு அளிக்கவில்லை. அதன் பிறகு ஆணையம் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படும்.

Related Stories: