சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது 2 நாளில் தங்கம் ரூ.1000க்கு மேல் உயர்வு: நகை வாங்குவோர் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக அதிகரித்து வருகிறது. நகை வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1000ம் மேல் அதிகரித்துள்ளது. தங்கம் விலை கடந்த 3 நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1,160 அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை குறைந்து வந்தது நகைப்பிரியர்களுக்கும், நடுத்தரக் குடும்பத்தினருக்கும் ஓரளவு மகிழ்ச்சியை அளித்தது. தங்கத்தை ஆர்வத்துடன் வாங்கினர். அவ்வப்போது விலை உயர்ந்தாலும் தங்கம் விலை பெரிதாக மாறவில்லை. தங்கம் விலை இந்த வாரம் தொடங்கியதிலிருந்தே ஏறுமுகத்தில் இருக்கிறது. தங்கம் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.120 உயர்ந்தது, நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்தது. நேற்று சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. பல வாரங்களாக தங்கம் விலை ரூ.38ஆயிரத்துக்கும் கீழ் சரிந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் 38ஆயிரத்துக்கு மேல் விற்பனையாகி வருகிறது. இதனால் நகை வாங்க மக்கள் சற்று தயக்கம் காட்டி வருகின்றனர்.

Related Stories: