மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கணக்கீடு வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட அறிக்கை: தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க கணக்கீடு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள சுமார் 1 லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் பயிரிட்ட விவசாயிகளிடமும் பாதிப்பு குறித்த விபரத்தை கேட்க வேண்டும். ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்த பட்சம் ரூ.2,500 வழங்க வேண்டும். மேலும் நெல் மூட்டைகள் தார்பாய் போட்டு மூடப்படாமல், மழையில் நனைந்து வீணாகக்கூடிய நிலையில் உள்ளது. எனவே தமிழக அரசு, மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக கணக்கெடுத்து, உரிய இழப்பீடு கொடுத்தும், நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, நெல் மூட்டைகளை பாதுகாத்து, கொள்முதல் செய்து, உரிய விலையை கொடுத்தும் விவசாயிகளுக்கு உதவிக்கரமாக இருக்க வேண்டும்.

Related Stories: