உலக சுகாதார அமைப்பின் குழுவில் அமெரிக்க பிரதிநிதியாக இந்திய டாக்டர் பரிந்துரை

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி தற்போது அமெரிக்காவின் 21வது சர்ஜன் ஜெனரலாக பணியாற்றி வருகிறார். இதற்கு கடந்த மார்ச் மாதம் செனட் சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழுவில் அமெரிக்காவின் பிரதிநிதியாக டாக்டர் விவேக் மூர்த்தியை அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்து உள்ளார். இந்திய வம்சாவளி சர்ஜன் ஜெனரலான டாக்டர் மூர்த்தி பூர்வீகம் கர்நாடகா. இவரது பெற்றோர் கர்நாடகாவில் பிரறந்தவர்கள். டாக்டர் மூர்த்தி, மியாமியில் வளர்ந்தார். ஹார்வர்டு, யேல் ஸ்கூல் ஆப் மெடிசின் மற்றும் யேல் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்.

Related Stories: