சில்லி பாயின்ட்...

* ஐசிசி வழங்கும் ‘மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனை’ விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா, அக்சர் படேல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

* புவனேஸ்வரில் அக். 11ம் தேதி தொடங்க உள்ள ஃபிபா யு-17 மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடருக்கான 21 வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி லீக் சுற்றில் அமெரிக்கா (அக். 11), மொராக்கோ (அக். 14), பிரேசில் (அக். 17) அணிகளின் சவாலை சந்திக்கிறது. அக். 30ம் தேதி வரை நடக்க உள்ள இந்த தொடருக்கான போட்டிகள் புவனேஸ்வர், மார்கோ, நவி மும்பையில் நடைபெற உள்ளன.

* சீனாவின் செங்டு நகரில் நடந்து வரும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் காலிறுதிக்கு முந்தய சுற்றில் சீன தைபே அணியுடன் மோதிய இந்தியா 0-3 என்ற கணக்கில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறியது. ஒற்றையர் ஆட்டங்களில் மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, தியா சித்தாலே தோல்வியைத் தழுவினர்.

* ரஷ்யா, பெலாரஸ் நாடுகளை சேர்ந்த குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாகவும், அவர்கள் இனி தங்கள் தேசிய கொடி மற்றும் தேசிய கீதத்துடன் போட்டிகளில் பங்கேற்கலாம் என்றும் சர்வதே பாக்சிங் கூட்டமைப்பு (ஐபிஏ) அறிவித்துள்ளது.

* 2022ம் ஆண்டுக்கான சிறந்த கோல் கீப்பர்களாக இந்தியாவின் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், சவிதா பூனியா தொடர்ந்து 2வது ஆண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

* ‘ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் பும்ரா விளையாட முடியாதது இந்திய அணிக்கு மிகப் பெரிய இழப்பு. அவருக்கு பதிலாக யாரை களமிறக்குவது என்பது பற்றி, ஷமியின் உடல்தகுதி சோதனைக்குப் பிறகு முடிவு செய்வோம்’ என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

* வெஸ்ட் இண்டீசுடன் கராரா ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த முதல் டி20ல் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 145/9 (மேயர்ஸ் 39, ஓடியன் ஸ்மித் 27, ரேமன் ரீபர் 19). ஆஸ்திரேலியா 19.5 ஓவரில் 146/7 (கேப்டன் பிஞ்ச் 58, மேத்யூ வேடு 39*). ஆஸி. 1-0 என முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டி20 பிரிஸ்பேனில் நாளை நடக்கிறது.

Related Stories: