சிறுபான்மையினர் எந்த அபாயத்திலும் இல்லை அனைவருக்கும் சமமான மக்கள் தொகை கொள்கை: மோகன் பகவத் வலியுறுத்தல்

நாக்பூர்: அனைத்து சமுதாயத்தினருக்குமான ஒருங்கிணைந்த மக்கள் தொகைக் கொள்கை அவசியம் தேவை. சிறுபான்மையினர் அபாயத்தில் இல்லை  என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகதவ் கூறினார். நாக்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் தசரா பேரணி நடந்தது. இதில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: சிலர், நம்மால் சிறுபான்மையினருக்கு அபாயம், அச்சுறுத்தல்கள் உள்ளதாக கூறி வருகின்றனர். ஆனால், அவர்கள் கூறுவது போன்று சிறுபான்மையினர் அபாயத்தில் இல்லை. இதற்கு முன்பும் இதுபோல் நிகழ்ந்ததில்லை. எதிர்காலத்திலும் அச்சுறுத்தல் இருக்காது. ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சகாதாரத்துவம், நட்புறவு ஆகிய உறுதிப்பாடுகள் உள்ளன. இந்தியாவுக்கு புதிய மக்கள் தொகை கொள்கை அவசியம் தேவை. இது அனைவருக்கும் பொதுவான, சமமானதாக இருக்க வேண்டும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்த கொள்கையை நாம் உருவாக்க வேண்டும். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.

Related Stories: