முலாயம் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

லக்னோ:  உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சமாஜ்வாடி கட்சி நிறுவனரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவுக்கு கடந்த ஞாயிறன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிபுணர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சமாஜ்வாடி நிறுவனர் முலாயம் சிங் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது’ என கூறப்பட்டுள்ளது. சமாஜ்வாடி கட்சி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘முலாயம் சிங் ஜீயின் உடல்நிலை மோசமாக உள்ளது. அவருக்கு உயிர்காக்கும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: