7 ஆண்டாக ஜாலியாக இருந்துவிட்டு... இப்போது டிஎஸ்பி மீது பலாத்கார வழக்கு: பஞ்சாப் போலீஸ் நடவடிக்கை

பாட்டியாலா: பஞ்சாப்பில் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் டிஎஸ்பி மீது போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் சங்கரூர் பகுதியில்  பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் டிஎஸ்பி சஞ்சீவ் சாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டில் 50 வயது மதிக்கத்தக்க பெண் வாடகைக்கு வசித்து வருகிறார். இந்நிலையில் அந்தப் பெண்ணிடம் சஞ்சீவ் சாகர் பல ஆண்டாக நெருக்கமாக இருந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

அதனால், தான் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை கிட்டதட்ட 7 ஆண்டுகளாக சஞ்சீவ் சாகரால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக நகர்ப்புற எஸ்டேட் போலீசாரிடம் அந்தப் பெண் புகார் அளித்தார். அதையடுத்து சஞ்சீவ் சாகர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அம்ரித்பால் சிங் கூறுகையில், ‘டிஎஸ்பி சஞ்சீவ் சாகரின் வீட்டில் குடியிருந்த பெண் அளித்த பாலியல் பலாத்கார புகாரின் அடிப்படையில் அவருக்கு எதிராக ஐபிசியின் பிரிவு 376 மற்றும் 506 இன் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

Related Stories: