போதை ஊசி விற்பனை; மேலும் 2 பேர் கைது: திண்டிவனத்தில் போலீஸ் அதிரடி சோதனை

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் போதை ஊசிகள் மற்றும் போதை மாத்திரைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிற்க்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திண்டிவனம் ஏஎஸ்பி அபிஷேக் குப்தா மேற்பார்வையில் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 4 பேரை கைது செய்து போதை ஊசி, மாத்திரை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் திண்டிவனம் திருவள்ளூர் நகர் பகுதியை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி விஜயகுமார் மற்றும் மருந்துகளை திண்டிவனம் பகுதியில் விற்பனை செய்து வந்த வசந்தபுரம் பகுதியை சேர்ந்த பால் (எ) தினேஷ்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: