கர்நாடக வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது: டாக்டர் படிப்பு முடித்தவரும் சிக்கினார்

பெங்களூரு: கர்நாடக வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த தமிழகத்தை சேர்ந்த டாக்டர் உட்பட 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் கோபிநத்தம் வனச்சரக பகுதிகளுக்குள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் ஏரிக்காடு பகுதியில் வசித்து வரும் மாரிமுத்து (27) என்பவர் நாட்டு துப்பாக்கி மற்றும் ஏர்கன்களுடன் சென்றுள்ளார். தமிழ்நாடு - கர்நாடகா மாநில வன எல்லை பகுதிகளான ஒகேனக்கல் மற்றும்

ஆலம்பாடி, செங்கப்பாடி பகுதிகளில் தனது நண்பர்களான நல்லாம்பட்டியை சேர்ந்த கவின்குமார் (27), விக்னேஷ் (25) ஆகியோரையும் அழைத்து சென்றுள்ளார். இவர்களில் கவின்குமார் என்பவர் மருத்துவ படிப்பை இந்த ஆண்டு முடித்துள்ளார்.

இந்நிலையில் கர்நாடக வனத்துறையினர் சார்பில் வனப்பகுதியில் விலங்குகளை கண்காணிக்க வைக்கப்பட்டிருந்த கேமராவில் இவர்கள் வனத்திற்குள் சுற்றித்திரிவது பதிவாகி உள்ளது. அதையடுத்து கோபிநத்தம் வனச்சரக அலுவலர்கள் ஒகேனக்கல் ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்த பச்சையண்ணன் மகன் மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவரிடம் ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் ஒரு ஏர்கன் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். அவருடன் வேட்டையாட சென்ற கவின்குமார் மருத்துவ  மாணவர் மற்றும் விக்னேஷ் ஆகியோரை கர்நாடக மாநில வனத்துறையினர் கைது செய்து கொள்ளேகால் வன அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: