தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அரசு அனுமதி: செங்கை பத்மநாபன் பாராட்டு

சென்னை: நமதுரிமை காக்கும் கட்சி பொது செயலாளர் டாக்டர் செங்கை பத்மநாபன் அறிக்கை: கடந்த 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்தது. பின்னர் அப்பேரணியை நவம்பர் 11ம் தேதி நடத்துவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதை பாராட்டுகிறேன். இதுதவிர, தமிழகத்தில் பிரிவினையை தூண்டும் சீமான் போன்ற சிலர், இந்து மதத்தையும் கடவுள்களையும் அவதூறாக பேசுவதை கண்டிக்கிறேன்.

ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெறும் அதே நாளில், மத நல்லிணக்க மனித சங்கிலி செயல்பாட்டை ஆதரிக்கும் மாற்று கட்சி தலைவர்கள், எதிர்கால எதிர்மறை விளைவுகளை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். நம் நாட்டில் அனைத்து மதங்களை சேர்ந்த இயக்கங்களின் அறவழி போராட்டத்துக்கு, சட்டம்-ஒழுங்கை காக்க சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன்.

Related Stories: