×

கொட்டும் மழை, வெட்ட வெளியில் 400 ஆண்டாக நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் தஞ்சாவூர் பீரங்கி

* சுற்றுலா பயணிகள் ஒரு முறை வந்து பார்க்கலாமே

நெற்களஞ்சிய மாவட்டமான தஞ்சாவூர் மாநகருக்கு சுற்றுலாவாக வருகிறீர்களா... அப்போ, நீங்கள் பார்க்க வேண்டிய மிக முக்கியமான இடம் ஒன்று உள்ளது. அதுதான் பீரங்கி மேடு. அங்க அப்படி என்ன தான் இருக்கு என்கிறீர்களா... இன்று உலகில் உள்ள, பழைய பீரங்கிகளில் ஐந்தாம் இடம் பிடித்துள்ள பீரங்கி உள்ள இடம் தான் இது....

தஞ்சாவூரை தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை கி.பி. 1532ல் நாயக்கர்கள் ஆட்சி செய்ய தொடங்கினர். கி.பி.1600 - 1645 காலகட்டத்தில் இரகுநாத நாயக்கர், தஞ்சாவூரை தலைநகரமாக கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த நாயக்க வம்சத்தின் 3வது மன்னர். தஞ்சாவூரை ஆண்ட நாயக்கர்களில் தனிச்சிறப்புடையவராக விளங்கியவர் தான் இந்த இரகுநாத நாயக்கர். இவர் தம்முடைய தந்தையின் மறைவிற்கு பின்பு கி.பி.1617ல் முறைப்படி தஞ்சாவூர் நாயக்கர் ஆட்சி பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டார். இன்றைய தஞ்சாவூரில் உள்ள மானோஜிப்பட்டி பகுதி அன்றைய கொல்லர்களின் இருப்பிடம் மற்றும் பணியிடம் என்பதையும் நினைவில் நிறுத்தி கொள்ள வேண்டும்.

எவ்வித வசதிகளும் இல்லாத காலத்தில் கொல்லர்களின் தொழிற்திறமையால் இரகுநாத நாயக்கரின் ஆணைக்கிணங்க உருவானது இராஜகோபால பீரங்கி என்று அழைக்கப்படும் பழமையான பீரங்கி. இதற்கு ஏன் இந்த பெயர் வந்தது. தான் வணங்கும் தெய்வமான, மன்னார்குடி, இராஜகோபால சுவாமியின் பெயரையே பெரும் பீரங்கிக்கு பெயராக வைத்தார் இரகுநாத நாயக்கர் என்பதையும் தெரிந்து கொள்வோம். தஞ்சாவூர் பெரிய கோட்டையின் உட்புறம் கிழக்கு வாசலையொட்டி வெள்ளை பிள்ளையார் கோயில் அருகில் ஒரு பெரிய மேடை (சுமார் 60 அடி உயரத்திற்கு குன்று) போல் அமைக்கப்பெற்று, அதன்மேல் இந்த பெரிய பீரங்கியானது வைக்கப்பட்டுள்ளது.

கட்டப்பட்ட நாள் முதல் இன்று வரை கம்பீரமாக இந்த பீரங்கி மேடை உள்ளது. காலப்போக்கில் இது பீரங்கி மேடு என்றே அழைக்கலாயிற்று. பொதுவாக பீரங்கிகள் வார்ப்பிரும்பால் வார்க்கப்படும். ஆனால் தஞ்சாவூர் பீரங்கியோ தேனிரும்புப் பட்டைகளால் இணைப்பு முறையில் உருவாக்க பெற்றுள்ளது. 26 அடி நீளம் 300 எம்எம் உருட்டுருளையும், 150 எம்எம் உட்சுவர் கணமும் கொண்டது. தேனிரும்பால் செய்ய பெற்ற இந்த பீரங்கியின் எடை 27 டன். இந்தியாவிலுள்ள மிகப்பெரிய பீரங்கிகளில் இதுவும் ஒன்றாகும். தஞ்சாவூர் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பீரங்கி செய்யும் தொழில்நுட்பமானது அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் பயன்படுத்தக் கூடிய ஒரு தொழில்நுட்பமாக கருதப்படுகிறது.

மற்ற மாநிலங்கள் மற்றும் மற்ற நாடுகளில் இருக்கும் பீரங்கிகள் வண்ணம் பூசப்பட்டு, பாதுகாப்பான முறையில் பூட்டப்பட்டிருக்கும். ஆனால் தஞ்சாவூரில் உள்ள இந்த பீரங்கி 400 ஆண்டுகளாக வெட்டவெளியில் கொட்டும் மழை, கொளுத்தும் வெயிலில் இருந்தும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் கம்பீரமாக கட்டுக்குலையாமல் உள்ளது. 2004ம் ஆண்டு கான்பூர் ஐஐடி-யை சேர்ந்தவர்கள் தஞ்சாவூரில் இருக்கும் இந்த ராஜகோபால பீரங்கியை ஆய்வு மேற்கொள்ளும் போது இந்த பீரங்கியை பற்றி கணிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். அதற்கு முன்னதாகவே ரோஸ்லர் எனும் ஆய்வாளர் அல்ட்ராசோனிக் எனப்படும் மீயொலி அலைகளை வைத்து இந்த பீரங்கியின் வடிவமைப்பை மிக தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

பிறகு இந்த குறிப்பை எடுத்துக் கொண்டு ஐஐடி சேர்ந்தவர்கள் இந்த பீரங்கியின் அடிப்படை அமைப்புகளை தெரிந்துள்ளார்கள். இந்த பீரங்கியை உருவாக்க இரண்டு முக்கியமான தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு தொழில்நுட்பம் மற்றும் வரலாறு கொண்ட இந்த பீரங்கி மேடானது முழுக்க, முழுக்க தமிழர்களின் தொழில்நுட்பங்களாலும், சிந்தனைகளாலும் உருவாக்கப்பட்டது. தஞ்சாவூருக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இதை ஒருமுறை பார்த்து நம் முன்னோர்களின் தொழில் திறமையை கண்டு மகிழ வேண்டும். தேனிரும்பால் செய்ய பெற்ற இந்த பீரங்கியின் எடை 27 டன்.

இந்தியாவிலுள்ள மிகப்பெரிய பீரங்கிகளில் இதுவும் ஒன்றாகும். தஞ்சாவூர் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பீரங்கி செய்யும் தொழில்நுட்பமானது அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் பயன்படுத்தக் கூடிய ஒரு தொழில்நுட்பமாக கருதப்படுகிறது.

Tags : Thanjavur Cannon , The Thanjavur Cannon has been standing tall for 400 years in the pouring rain.
× RELATED வெட்டவெளியில் வெயிலிலும் மழையிலும்...