இரண்டே நாட்களில் 10 மாடுகளை தாக்கி கொன்று அட்டகாசம்: கொடூர புலியை கூண்டு வைத்துப் பிடித்து வனத்துறையினர் அதிரடி

மூணாறு: கேரளாவின் மூணாறு எஸ்டேட் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் புகுந்து கடந்த 2 நாட்களில் 10 மாடுகளை தாக்கி கொன்ற புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்துள்ளனர். கேரள மாநிலம் மூணாறில் உள்ள நயமக்காடு எஸ்டேட் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய புலி ஒன்று கடந்த 2 தினங்களில் 10 மாடுகளை தாக்கி கொன்றதால் மக்கள் பீதியில் உறைந்தனர். மேலும் கால்நடைகளை குறிவைத்து தாக்கி கொள்ளும் புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நயமக்காடு பகுதியில் புலியை பிடிக்க 3 இடங்களில் வனத்துறையினர் கூண்டு அமைத்தனர்.

குறிப்பாக 5 மாடுகளை தாக்கி கொன்ற மாட்டுபட்டியில் பெரிய கூண்டு வைத்தனர். அதில் நேற்று இரவு 8.30 மணி அளவில் ஆவேசப்புலி வசமாக சிக்கியது. கூண்டுக்குள் அகப்பட்ட புலியை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு போய் விடுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இரண்டே நாளில் மரண பயத்தை ஏற்படுத்திய புலி வனத்துறையினர் வைத்த கூண்டில் சுக்கியதால் மூணாறு மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories: