கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில சுற்றுலா பயணிகளை விரட்டிய காட்டுயானைகள்...

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மலைபாதையில் குட்டியுடன் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளது. அவ்வப்போது உணவு, மற்றும் தண்ணீருக்காக சாலையை கடக்கின்றன. இந்நிலையில் முள்ளூர் என்ற பகுதியில் காட்டுயானை சாலையை கடக்க முயன்ற போது சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க முயன்றனர். காட்டுயானைகள் ஆக்ரோஷமாக வந்ததை கண்ட சுற்றுலா பயணிகள் ஓட்டம் பிடித்தனர். பின்னர் காட்டுயானைகள் தேயிலை தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது.

Related Stories: