ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மகாராஷ்டிராவில் சராசரியாக மாதம் 2 லட்சம் சொத்து பதிவு: பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் தகவல்

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மட்டும் மாதந்தோறும் சராசரியாக 2 லட்சம் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டதாக பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக பத்திரப்பதிவு மற்றும் அதன் மூலம் கிடைத்த வருவாய் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் வரையிலான காலத்தில் சராசரியாக மாதம் 2 லட்சம் சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் கூறியதாவது: ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் பத்திரப்பதிவு மூலம் மாதம் ரூ.3000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடுகையில் பத்திரப்பதிவு மற்றும் அதன் மூலம் கிடைத்த வருவாய் அதிகம். எனினும் கொரோனா தொற்றுக்கு முந்தைய ஆண்டான 2019 விட இந்த ஆண்டு செய்யப்பட்ட பத்திரப்பதிவு எண்ணிக்கை குறைவு. ஆனால் அதன் மூலம் கிடைத்த வருவாய் அதிகம். இதற்கு முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் உயர்த்தப்பட்ட சொத்துமதிப்பு பதிவுக்கட்டண உயர்வு ஆகியவை முக்கிய காரணமாகும்.

 இது தொடர்பான தரவுகளை ஒப்பிடுகையில் 2022ம் ஆண்டு 6 மாதத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த பதிவானது கடந்த ஆண்டை விட  21.97 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 60 சதவீதமாக உள்ளது. கடந்த 2019ம் ஆண்டை விட இந்த ஆண்டு பத்திரப்பதிவு 14.28 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதன் மூலம் கிடைத்த வருமானம் அதிகரித்துள்ளது. இதற்கு சொத்து மதிப்பபு அதிகரிப்பு மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு, ஆர்ஆர் ரேட் அதிகரிப்பு உள்ளிட்டவை காரணமாகும். இது தொடர்பாக பத்திரப்பதிவுத்துறை ஐஜி சரவண் ஹர்திக்கர் கூறியதாவது: மகாராஷ்டிராவில் சொத்துப்பதிவு மதிப்பு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் சிறிய காலிமனைகள் பதிவு செய்வது குறைந்துள்ளது.

கொரோனா காலத்தில் உரிம ஒப்பந்தம் பதிவு செய்வது குறைந்திருந்தது. அது தற்போது அதிகரித்துள்ளது. தற்போது பத்திரப்பதிவு நிலையாக அதிகரித்துவருகிறது. கடந்த 6 மாதங்களில் சராசரியாக மாதம் 2 லட்சம் என்ற அளவில் பத்திரப்பதிவு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்கங்களின்  கூட்டமைப்பு தலைவர் சுனில் புர்டே கூறியதாவது;  விழாக்காலங்களில் பத்திரப்பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் ரியல் எஸ்டேட் நல்ல வளர்ச்சியை பிரதிபலிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 2022ம் ஆண்டு 6 மாதத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த பதிவானது கடந்த ஆண்டை விட  21.97 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 60 சதவீதமாக உள்ளது. கடந்த 2019ம் ஆண்டை விட இந்த ஆண்டு பத்திரப்பதிவு 14.28 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதன் மூலம் கிடைத்த வருமானம் அதிகரித்துள்ளது.

Related Stories: