திராவிட மாடல் ஆட்சி ஆன்மிகத்துக்கு எதிரானது என்று மதத்தை வைத்து பிழைக்கக்கூடிய சிலர் பேசி வருகிறார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!

சென்னை: இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்ப்பில் வள்ளலார் முப்பெரும் விழா தொடங்கியது. வள்ளலார் முப்பெரும் விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் வள்ளலார்-200 இலச்சினை, தபால் உறை, சிறப்பு மலர் ஆகியவற்றை முதல்வர் வெளியிட்டார். இதனை தொடர்ந்து வள்ளலார் முப்பெரும் விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; வள்ளலார் ஏற்றிய தீபத்திற்கு 152 ஆண்டுகள் ஆகிறது. வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க வல்லுநர் குழு ஆலோசனை பெறப்பட்டுள்ளது. ரூ.100 கோடியில் விரைவில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமான பணி தொடங்கும். பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாகவும் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும் திமுக அரசு அறிவித்தது.

வள்ளலார் பிறந்நாளை தனிப்பெரும் கருணை நாளாக திமுக அரசு அறிவித்துள்ளது. ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல திமுக, ஆன்மிகத்தை அரசியலுக்கும் சுயநலத்துக்கும் பயன்படுத்துவதற்கு எதிரானதுதான் திமுக ஆட்சி. திராவிட மாடல் ஆட்சி ஆன்மிகத்துக்கு எதிரானது என்று மதத்தை வைத்து பிழைக்கக்கூடிய சிலர் பேசி வருகிறார்கள். தமிழ் மண்ணின் சமய பண்பாட்டை அறிந்து திமுக அரசு செயல்படுகிறது. வள்ளலாரை போற்றுவது திமுக அரசின் கடமை என்று கூறினார்.

Related Stories: