ராமேஸ்வரத்தில் கள்ளச்சந்தை மதுவில் போதை மாத்திரை கலந்து விற்பனை: அதிரடியாக ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கள்ளச்சந்தை மதுவில் போதை மாத்திரை கலந்து விற்பனை செய்தது தொடர்பாக அதிரடியாக ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராமேஸ்வரம் சேரான்கோட்டை கடற்கரைப் பகுதியில்  கள்ளமது விற்பனை செய்வதாக தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் டிஎஸ்பி தனஞ்ஜெயன் தலைமையிலான  போலீசார் ரகசிய சோதனையில் ஈடுபட்டனர்.  அங்கு காலையில் கரை திரும்பும் மீனவர்களுக்கு கள்ள சந்தையில் மதுபாட்டில் விற்பனை செய்வது உறுதியானது.

கரையூர் பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் குமரகுரு தனது இருச்சக்கர வாகனத்தில் 50 மதுபாட்டில்கள் வைத்து விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.  இவரை அதிரடியாக கைது செய்த போலீசார் இருசக்கர வாகனத்துடன் மது பாட்டில்களை பறிமுதல் செய்து துறைமுக காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் கள்ளமதுவில் போதை மாத்திரை கலந்து விற்கப்பட்டது கண்டறியப்பட்டது. உடனடியாக வழக்கு பதிவு செய்து போலீசார் ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர். இவர்மீது கள்ளமது விற்பனை தொடர்பாக ஏற்கனவே வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: