காஷ்மீரில் தீவிரவாதிகள், ராணுவத்தினர் இடையே மோதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை..!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2 இடங்களில் நடந்த என்கவுண்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படைக்கு உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து டிராச், மொழு ஆகிய இடங்களில் அவர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். டிராச் பகுதியில் வீடு வீடாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்த போது கட்டிடம் ஒன்றில் இருந்து சிலர் பாதுகாப்பு படையை நோக்கி சுட்டனர். ராணுவம் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் 3 பேரை பாதுகாப்பு படை சுட்டுக் கொன்றது.

இவர்கள் அனைவரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. அதேபோல சோபியான் மாவட்டம் மொழு என்ற இடத்தில் பதுங்கியிருந்த மற்றோரு தீவிரவாதியும் பதில் தாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடங்களில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: