உத்தராகண்ட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து: 25 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தராகண்ட்டின் மலை மாவட்டமான பவுரி கார்வாலில் நேற்று இரவு பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 46 பயணிகளுடன் சென்ற இந்த பேருந்து துமாகோட் பகுதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. அப்போது பேருந்து பல முறை உருண்டதால் அதில் இருந்த மக்கள் அலறினர். இதனை தொடர்ந்து மலை கிராமத்தினர் அளித்த தகவலை அடுத்து விரைந்து வந்த பேரிடர் மேலாண்மை படையினர் இரவு நேரத்திலும் பயணிகளை மீட்க முயற்சி மேற்கொண்டனர்.

பெரும் போராட்டங்களுக்கு பிறகு பள்ளத்தாக்கில் விபத்துக்குள்ளான பேருந்தை சென்றடைந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் விபத்தில் உடன் நசுங்கியும் 25 பேர் உயிரிழந்ததாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்த 21 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: