முடிவுக்கு வந்த இழுபறி: டிவிட்டரை வாங்க எலான் மஸ்க் சம்மதம்..!

லண்டன்: டிவிட்டரை வாங்க எலான் மஸ்க் சம்மதம் தெரிவித்துள்ளார். உலகின் நம்பர்-1 பணக்காரரான அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், சமீபத்தில் டிவிட்டர் சமூக வலைதளத்தை ரூ.3.5 லட்சம் கோடியில் வாங்குவதாக விலை பேசினார். இதற்கு டிவிட்டர் நிர்வாகம் ஒப்புக் கொண்ட நிலையில், அதில் போலி கணக்குகள் அதிகளவில் இருப்பதாக மஸ்க் குற்றம்சாட்டினார். அதை வாங்கும் ஒப்பந்தத்தையும் ரத்து செய்தார். இதை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் மஸ்க் மீது டிவிட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இச்சூழலில் முன்னதாக டிவிட்டர் நிறுவனத்தின் கோரிக்கைகளுக்கு இணங்கி, டிவிட்டர் பங்கு ஒன்றை 54.20 டாலர்கள் வீதம் கையகப்படுத்தும் வகையில் ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே டிவிட்டர் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கையும் தலா 54.20 டாலருக்கு வாங்கிக் கொள்வதாக எலான் மஸ்க் கூறியிருந்தார். இதற்கான ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்பட்டு விட்டதாக புளூம்பெர்க், ராய்டர் இணையதள செய்தி நிறுவனங்களில் செய்தி வெளியாகியுள்ளன. இதையடுத்து டிவிட்டரின் பெரும்பான்மை பங்குகள் எலான் மஸ்க் வசம் செல்ல உள்ளது.

Related Stories: