ரஷ்யா அல்லது உக்ரைன் ஆகிய இரு நாடுகளில் மக்கள் எந்த நாட்டுடன் இருக்க விரும்புகிறார்கள் என்றும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: எலான் மஸ்க் டிவிட்டால் பரபரப்பு

டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க் ரஷ்யா - உக்ரைன் போருக்கு ஆலோசனை கூறி டிவிட்டரில் நடத்தியுள்ள வாக்கெடுப்பிற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் ஏழு மாதங்களை கடந்து நீடித்து வரும் நிலையில், இந்த போரில் அமைதியா ஏற்படுத்த ரஷ்யா தன்னிடம் இணைத்துக்கொண்ட 4 பிராந்தியங்களில் ஐ.நா.சபை கண்காணிப்புடன் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதன் முடிவுகளின் படி போரில் இருதரப்பு அமைதியை ஏற்கவேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்திருந்தார். கிரிமியா, டான்பாஸ் பிராந்திய மக்களிடம் அவர்கள் ரஷ்யா அல்லது உக்ரைன் ஆகிய இரு நாடுகளில் அவர்கள் எந்த நாட்டுடன் இருக்க விரும்புகிறார்கள் என்றும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள எலான் மஸ்க் அதுகுறித்து டிவிட்டரில் வாக்கெடுப்பு ஒன்றையும் நடத்தியுள்ளார். எலான் மஸ்கின் இந்த ஆலோசனை, உக்ரைன் நாட்டு மக்கள் மற்றும் அந்நாட்டு அதிபர் விளாடிமர் ஜெலென்ஸ்கி ஆகியோரிடம் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எலான் மஸ்கிற்க பதிலடி கொடுக்கும் விதத்தில் உங்களுக்கு எந்த எலான் மஸ்கை பிடிக்கும் ரஷ்ய ஆதரவு எலான் மஸ்க்-ஆ, அல்லது உக்ரைன் ஆதரவு எலான் மஸ்க்-ஆ என்று உக்ரைன் அதிபர் டிவிட்டறில் போட்டி வாக்கெடுப்பு நடத்தியுள்ளார்.

தன் மீதான புகார்கள் குறித்து பதிலளித்துள்ள எலான் மஸ்க் போரில் வெற்றிபெறும் வாய்ப்பு உக்ரைனுக்கு மிக குறைவு என்றார். அணுஆயுத அபாயம், போர் இழப்புகள் இரு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அமைதியே சிறந்த வழி என்பதை அறிவுறுத்தியதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.

போர் பாதிப்புக்கு ஆளான உக்ரைனுக்கு தனது ஸ்டார் லிங்க் நிறுவனம் மூலம் இணைய தகவல் தொடர்பு உதவி அளித்ததையும் எலான் மஸ்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Stories: