2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிப்பு

டெல்லி: 2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிக்கப்பட்டு உள்ளது நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது. அக்டோபர் தொடக்கம் என்றால் நோபல் பரிசு காலம்.

ஆறு நாட்கள், ஆறு பரிசுகள், உலகம் முழுவதிலுமிருந்து புதிய முகங்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் மனித உரிமைத் தலைவர்கள் இந்த் நோபல் பரிசு பட்டியலில் இடம் பெறுவர் அதில் தேர்ந்து எடுக்கபட்டு வழங்கப்படுவார்கள். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு சீசன் இன்று மருத்துவ விருதுடன் தொடங்குகிறது. செவ்வாய்கிழமை இயற்பியல், புதன்கிழமை வேதியியல் மற்றும் வியாழன் இலக்கியம். 2022ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதார விருது அக்டோபர் 10ஆம் தேதியும் அறிவிக்கப்படும்.

கடந்த வருடம் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜுலியஸ் (David Julius) மற்றும் ஆர்டம் பட்டாபுடியான் (Ardem Patapoutian) ஆகிய இருவருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கபட்டது. வெப்பநிலை மற்றும் தொடுதல் மூலமாக உடலில் நடக்கும் மாற்றங்களை, உடலை தொடாமல் அறியும் உணரிகளைக் கண்டுபிடித்ததற்காக இந்த இரு ஆராய்ச்சியாளர்களும் இந்தப் பரிசை பெற்றனர். 2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: