ஆடை வியாபாரம் தொடங்கிய அலியா பட்

மும்பை: ஆடை வியாபாரத்தை தொடங்கியிருக்கிறார் நடிகை அலியா பட். இந்தியில் பல படங்களில் நடித்துள்ள அலியா பட், தெலுங்கில் ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் ஹீரோயினாக நடித்தார். பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து மணந்தார். தற்போது அலியா பட், கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் ஆடை வியாபாரத்தை அவர் தொடங்கியிருக்கிறார். முதல் கட்டமாக குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களுக்கான ஆடைகளை அவர் விற்பனைக்காக கொண்டு வந்தார். இந்நிலையில் இப்போது கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு ஆடைகளையும் வியாபாரத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

பாலிவுட்டில் தற்போது கர்ப்பமாக இருக்கும் நடிகை பிபாஷா பாசு உள்பட சில நடிகைகள் இந்த மகப்பேறு ஆடைகளை அலியா பட் நிறுவனத்தில் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். சினிமாவில் நடிப்பில் பெயர் வாங்கியதுபோல் ஆடை வியாபாரத்திலும் பிரபலம் அடைய விரும்புவதாக அலியா பட் தெரிவித்துள்ளார். கர்ப்பமாக இருப்பதால் விரைவில் படப்பிடிப்புக்கு பிரேக் கொடுத்துவிட்டு, ஓய்வு எடுக்கப்போவதாகவும் அலியா பட் கூறியிருக்கிறார்.

Related Stories: