மகளிர் ஆசிய கோப்பை இந்தியாவுக்கு 2வது வெற்றி

சில்ஹட்: வங்கதேசத்தில் நடைபெறும் 8வது மகளிர் ஆசிய கோப்பை டி20 போட்டித் தொடரில், இந்திய அணி தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்தது. முதல் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தியிருந்த இந்திய அணி நேற்று மலேசியாவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற மலேசியா முதலில் பந்துவீச... இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. மேகனா 69 ரன் (53 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்), ஷபாலி வர்மா 46 ரன் (39 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), ரிச்சா கோஷ் 33* ரன் விளாசினர். மலேசியா தரப்பில் வின்பிரட் துரைசிங்கம், நூர் டானியா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்   மலேசியா களமிறங்கியது. அந்த அணி 5.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 16 ரன்  எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. மழை தொடர்ந்து பெய்ததால், டி/எல் விதிப்படி இந்தியா 30 ரன் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ச்சியாக 2வது வெற்றியை பெற்ற இந்தியா, இன்று ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதுகிறது.

Related Stories: