சுவீடனின் ஸ்வந்தேக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: இந்தாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனை சேர்ந்த ஸ்வந்தே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்த கண்டுபிடிப்பை பங்களித்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.7.35 கோடி ரொக்கப்பரிசு அடங்கியது. இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்வந்தே பாபோவுக்கு, அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக அவருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று இயற்பியல், நாளை வேதியியல், வியாழக்கிழமை இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகின்றன. 2022ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வரும் வெள்ளிக்கிழமையும், பொருளாதாரத்துக்கான விருது அக்டோபர் 10ம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளன. கடந்தாண்டு அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜுலியஸ் மற்றும் ஆர்டம் படபூடியான் ஆகிய இருவருக்கும், வெப்பநிலை மற்றும் தொடுதல் மூலமாக உடலில் நடக்கும் மாற்றங்களை, உடலை தொடாமல் அறியும் உணரிகளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Related Stories: