பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் மெட்ரோ ரயில் பணிக்காக தூண்கள் அமைக்கும் பணி: நீதிபதிகள் நேரில் ஆய்வு

பூந்தமல்லி: மெரினா கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணி நடைப்பெற உள்ளது. இதில், நீதிமன்ற வளாகத்தின் முன் பகுதி அமைந்துள்ள இடத்தில்  தூண்கள் அமைக்கப்பட உள்ளது. இதையொட்டி, தூண்கள் அமைய உள்ள இடம் அளவீடு செய்யப்பட்டது. இதனால் நீதிமன்றத்தின் முகப்பு பகுதி மற்றும் மதில்சுவரின் ஒரு பகுதி இடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த பகுதிகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிசா பானு, ஆசா ஆகியோர் நேரில் பார்வையிட்டு  ஆய்வு செய்தனர். அப்போது, நீதிமன்றத்தின் கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தூண்கள்  அமைக்கப்படும் விதம் குறித்து அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டறிந்தனர்.  மேலும்,  நீதிமன்ற வளாகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தூண்கள்  அமைக்கவும் அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது,  பூந்தமல்லி நீதிமன்ற நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகள், பணியாளர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள்,  என பலர்  உடன் இருந்தனர்.

Related Stories: