வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன், பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை

பூந்தமல்லி: திருவேற்காடு, கோ-ஆப்ரேடிவ் நகர்,  கஜேந்திரன் சாலை பகுதியை சேர்ந்தவர் தாட்சாயிணி (46). இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். கடந்த 30ம் தேதி தாட்சாயிணி வீட்டை பூட்டி விட்டு வந்தவாசியில் உள்ள தாய் வீட்டுக்கு இரு மகள்களுடன் சென்று விட்டார். அங்கிருந்து நேற்று வீட்டுக்கு திரும்பி வந்தபோது, முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்த கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 25 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: