ரூ.10,000 லஞ்சம் பெண் தாசில்தார் கைது

துவரங்குறிச்சி: திருச்சி மாவட்டம் காரைப்பட்டி அடுத்த மஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (59). விவசாயியான இவர், தனது தோட்டத்திற்கு செல்லும் மின்சார வயர்களில் புங்கமரம் உரசியதால் அந்த கிளைகளை வெட்டியுள்ளார். இதை அறிந்த மருங்காபுரி தாசில்தார் லட்சுமி (56) மரங்களை வெட்டுவதற்கு அனுமதி இல்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க தனக்கு லஞ்சமாக ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. சுப்பிரமணியன் ரூ.10 ஆயிரம் மட்டும் கொடுப்பதாக கூறி, திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்தார். இதையடுத்து அவர்களது ஆலோசனையில் பேரில் ரசாயனம் கலந்த ரூ.10 ஆயிரத்தை நேற்று மாலை மருங்காபுரி தாசில்தார் லட்சுமியிடம் சுப்ரமணி கொடுத்தபோது போலீசார் தாசில்தார் லட்சுமியை கைது செய்தனர்.

Related Stories: