ஏட்டாக இருந்தபோது 10 வழக்குகளில் சிக்கியவர் எஸ்.ஐ. இருக்கையில் அமர்ந்து விசாரணை நடத்திய ரவுடி

கோபி: கோபி, கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் இருக்கையில் அமர்ந்து விசாரணை நடத்திய ரவுடியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி அருகே பெருந்தலையூர் பகுதியை சேர்ந்தவர் சகாபுதீன் (58). இவர் போலீசில் ஏட்டாக பணிபுரிந்தார். பணியின்போது பொது இடத்தில் தகராறு, மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல குற்ற செயல்களில் ஈடுபட்டார். இதனால் அவர் மீது கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சகாபுதீன் 2007ல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு காவல் துறை பதிவேட்டில் ரவுடியாக பதிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கவுந்தம்பாடி போலீஸ் நிலையத்திற்கு வந்த சகாபுதீன், சப்-இன்ஸ்பெக்டர் இருக்கையில் அமர்ந்து காவல் நிலையத்துக்கு வருபவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார். இது குறித்து தகவலறிந்து கோபி டிஎஸ்பி சியாமளா தேவி, அங்கு பணியில் இருந்த போலீசார் அனைவரையும் டிஎஸ்பி அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் இருக்கையில் அமர்ந்து சகாபுதீன் விசாரணை நடத்தியது உண்மை என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர்களிடம் விளக்கம் கேட்ட டிஎஸ்பி, கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பினார். இதுபற்றி சகாபுதீனிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.

Related Stories: