சென்னை வருமான வரித்துறை கூடுதல் இயக்குநரின் ரூ.7.33 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: முறைகேடாக பணம் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் அண்டாசு ரவீந்தரின் ரூ.7.33 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சென்னையில் வருமான வரித்துறையின் கூடுதல் இயக்குனராக இருந்தவர் அண்டாசு ரவீந்தர். இவர் சென்னையில் பணியாற்றியபோது, சிபிஐ இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து அமலாகத்துறையும் இவர் மீது வழக்குப்பதிவு செய்தது. அதன் ஒரு கட்டமாக, ரூ.7.33 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்க இயக்குனரகம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.

இணைக்கப்பட்ட ஐந்து அசையா சொத்துக்களில் நுங்கம்பாக்கத்தில் 2,108 சதுர அடியில் ஒரு பிளாட் உள்ளது. அண்டாசு ரவீந்தர் மற்றும் அவரது மனைவி கவிதா அண்டாசு மீது சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆர் அடிப்படையில் பணமோசடி விசாரணையை அமலாக்கத்துறை தொடங்கியது தொடங்கியது. அவர் மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி கணவன், மனைவி மீது 2005 முதல் 2011 வரை ரூ.2.32 கோடி அளவுக்கு தங்கள் பெயரில் சொத்து சேர்த்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது அறியப்பட்ட வருமான ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 171.41 சவீதம் அதிகமாகும்.

விசாரணையில் தம்பதியினர் மற்றவர்களுடன் கிரிமினல் சதியில் ஈடுபட்டு, ஐதராபாத்தில் உள்ள ஸ்ரீரவிதேஜா டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஐந்து அசையா சொத்துக்களில் வருமானத்துக்கு அதிகமாக முதலீடு செய்தது தெரியவந்தது. முன்னதாக, வரி தொடர்பான தகராறுகளைத் தீர்ப்பதற்காக அண்டாசு ரவீந்தர், 2011ல் பெற்றதாகக் கூறப்படும் ரூ. 50 லட்சம் சட்டவிரோதமாகச் செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மத்திய சிவில் சர்வீசஸ் நடத்தை விதிகளின் 56 ஜெ.பிரிவின்படி நிதி அமைச்சகத்தால் அண்டாசு ரவீந்தர் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: